லங்கா டி:10 கிரிக்கெட் தொடர்பான அப்டேட்!

8 months ago
Cricket
(153 views)
aivarree.com

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லங்கா டி:10 கிரிக்கெட் போட்டிகளில் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது.

உள்ளூர், சர்வதேச வீரர்களின் பங்கு பற்றலுடன் இந்த போட்டிகள் டிசம்பர் 12 ஆரம்பமாகி டிசம்பர் 23 ஆம் திகதி நிறைவடையும்.

லங்கா டி:10 தொடரின் தொடக்க சீசனுக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் நவம்பர் 10 ஆம் திகதி இடம்பெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கிரிக்கெட்டை வடிவமைப்பதில் கணிசமான பங்காற்றிய ஆறு நகரங்களின் பெயரால் இந்த போட்டியில் பங்கெடுக்கும் ஆறு அணிகள் மோதும்.

ஆடவர் டி:10 போட்டிகளை தவிர, முதன்முறையாக மகளிர் டி:10 போட்டியை நடத்தவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் உலகின் சில சிறந்த பெண் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் லங்கா டி:10 போட்டியை நடத்துவதில் மகிழ்ச்சி அளிப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொடர் வெற்றிகரமான தொடராக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

லங்கா டி:10 க்கான வீரர்களின் பதிவுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அது நவம்பர் 5 ஆம் திகதி முடிவடையும்.

வீரர்கள் தங்களை http://ttensports.com/ இல் பதிவு செய்யலாம்.