ஹென்றி ஸ்டீல் ஓல்கொட் சுற்று போட்டியில் கெளரவிக்கப்படவுள்ள எட்டு முன்னணி வீரர்கள்

3 months ago
Cricket
(163 views)
aivarree.com

இலங்கையில் உள்ள எட்டு முன்னணி பௌத்த பாடசாலைகள் இணைந்து நடத்தும் வருடாந்த கேணல் ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் நினைவு கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (08) முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடரானது கண்டி, அஸ்கிரிய மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இந்த போட்டியின் போது இலங்கையின் எட்டு சிறந்த கிரிக்கெட் வீரர்கள் கெளரவிக்கப்படவுள்ளனர்.

அதன்படி, அர்ஜூன ரணதுங்க, உபுல் சந்தன, இஷார அமசரசிங்க, சமன் ஜயனத, நிஹால் சொய்ஷா, ரஞ்சித் மதுருசிங்ஹே, பிரமோதய விக்ரசிங்க மற்றும் சேனக திஸாநாயக்க ஆகிய வீரர்களே கெளரவிக்கப்படவுள்ளவர்கள் ஆவர்.