அமைச்சரவையின் தீர்மானம் எதுவாக இருப்பினும் தானும், எமது குழுவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால குழுவின் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர்களை மீண்டும் ஒரு வெற்றிகரமான நிலைக்கு கொண்டு வருவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
1996 ஆம் உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் 7 நபர்களை உள்ளடக்கியவாறு இக் குழு நியமிக்கப்பட்டது.
இந் நிலையில் இடைக்கால குழுவை நியமிப்பது தொடர்பில் இன்று மாலை அமைச்சரவையில் ஆராயவுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.