ACC U19; இலங்கை அணியில் தமிழர்

7 months ago
Cricket
(218 views)
aivarree.com

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண (ACC U19) போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் தலைவராக கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் சினெத் ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

15 பேர் கொண்ட இந்த அணியில் கொழும்பு புனித பெனடிக் கல்லூரி மாணவன் சண்முகநாதன் சாருஜனும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

15 பேரை தவிர மேலதிக வீரர்களாக இருவர் பெயரிடப்பட்டுள்ளனர்.

குறித்த போட்டியானது எதிர்வரும் டிசம்பர் 08 ஆம் திகதி டுபாயில் ஆரம்பமாகவுள்ளது.

இறுதிப் போட்டி டிசம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

Image