அவுஸ்திரேலியாவின் முடிவால் சவுதி அரேபியாவுக்கு அதிகரித்த வாய்ப்பு

9 months ago
Football
(368 views)
aivarree.com

2034 ஆண்களுக்கான கால்பந்து உலகக் கிண்ணத்தை சவுதி அரேபியா நடத்துவதற்கான வாய்ப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.

போட்டியை நடத்துவதற்கான ஏலத்தை சமர்ப்பிக்க ஃபிஃபா செவ்வாய்க்கிழமை (31) காலக்கெடுவை நிர்ணயித்தது.

இந்த ஏலத்திலிருந்து அவுஸ்திரேலிய கால்பந்து சம்மேளனம் விலகியதை அடுத்து சவுதி அரேபியாவுக்கு 2034 ஃபிஃபா உலகக் கிண்ணத்தை நடத்துவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இது குறித்து அவுஸ்திரேலியா கால்பந்து சம்மேளன (FA) தலைவர் ஜேம்ஸ் ஜோன்சன்,

ஃபிஃபா உலகக் கிண்ணத்தை நடத்துவதற்கான வாய்ப்பை நாங்கள் ஆராய்ந்தோம்.

அனைத்து காரணிகளையும் கருத்திற் கொண்டு மேற்கண்ட தீர்மானத்துக்கு வந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.