உலகக் கிண்ண தோல்வியின் பின்னர் மெளனம் கலைத்தார் ரோஹித்

6 months ago
Cricket
(237 views)
aivarree.com

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2023 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பின்னர், முதல் முறையாக ரோஹித் சர்மா பேசியுள்ளார்.

அவுஸ்திரலேியாவுக்கு எதிரான இறுதிப் போட்டி வரை தான் எதிர்கொண்ட 2023 உலகக் கிண்ண அனைத்து போட்டிகளிலும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது.

எனினும் துரதிர்ஷ்டவசமாக நவம்பர் 19 ஆம் திகதி அஹமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது.

இது அனைத்து இந்திய அணியினருக்கும், ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாகவும், மன வேதனையாகவும் அமைந்தது.

இதிலிருந்து நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா விராட் கோஹ்லி இன்னும் முழுமையாக மீளவில்லை.

தற்பொழுது ரோஹித் சர்மா முதல்முறையாக வெளியில் வந்து உலகக் கிண்ண தோல்வி குறித்தும், அதனால் தனக்கு ஏற்பட்ட மன பாதிப்புகள் குறித்தும் உருக்கமாக பேசிய வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் ரோஹித் சர்மா,

 • இதிலிருந்து எப்படி மீள்வது என்று எனக்குத் தெரியவில்லை.
 • என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.
 • என் குடும்பத்தினரும் என் நண்பர்களும் எனக்கு துணையாக தொடர்ந்து வந்தார்கள். என்னை சுற்றி இருந்த விடயங்களை அவர்கள் எளிமையாக வைத்திருந்து பார்த்துக் கொண்டார்கள்.
 • இது கொஞ்சம் பயனுள்ளதாக இருந்தது.
 • ஆனாலும் ஏற்பட்ட தோல்வி ஜீரணிக்க முடியாத ஒன்று.
 • இதைத் தாண்டி வருவது, அதை நகர்த்துவது அவ்வளவு எளிதாக இல்லை.
  நான் 50 ஓவர் உலகக் கிண்ணத்தை பார்த்து வளர்ந்தவன். எனக்கு அதுதான் மிகப்பெரிய விடயமும் பரிசும் கூட.
 • நாங்கள் இதற்காக இத்தனை ஆண்டுகள் உழைத்தோம்.
 • இறுதியில் நாங்கள் அதை அடைய முடியாமல் போனது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது.
 • நிச்சயம் இது யாரையும் ஏமாற்றம் அடைய வைக்கும், விரக்தி அடைய வைக்கும்.
 • எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் எங்களால் முடிந்த அத்தனையையும் செய்தோம் – என்றார்.