பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளர்கள்

11 months ago
Cricket
(162 views)
aivarree.com

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப் பந்து, சுழல் பந்து வீச்சு பயிற்சியாளர்களாக முன்னாள் வீரர்களான உமர் குல் மற்றும் சயீத் அஜ்மல் ஆகியோர் முறையே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் 2009 டி-20 உலகக் கிண்ணம் மற்றும் 2012 ஆசியக் கிண்ணம் ஆகியவற்றை வெற்றி கொண்ட பாகிஸ்தான் அணியின் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

எதிர்வரும் டிசம்பர் 14 முதல் 2024 ஜனவரி 7 வரை திட்டமிடப்பட்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், 2024 ஜனவரி 12 முதல் 21 வரை நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடர் என்பவற்றுக்கு பாகிஸ்தான் அணியை தயார்படுத்துவது அவர்களின் முதற் கட்ட பணிகளாக இருக்கும்.

உமர் குல் முன்பு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 ஐ தொடரின் போது பாகிஸ்தான் ஆடவர் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.