PCB இன் தேர்வுக்குழு தலைவர் பொறுப்பிலிருந்து இன்சமாம் இராஜினாமா

1 year ago
Cricket
(262 views)
aivarree.com

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தலைமை தேர்வாளர் பதவியிலிருந்து இம்சமாம் உல்-ஹாக் உடன் அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார்.

நடப்பு உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி அடைந்த தொடர் தோல்விகளுக்கு மத்தியில் இந்த பதவி விலகல் வந்துள்ளது.

2023 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி தனது முதல் ஆறு போட்டிகளில் இரண்டில் வெற்றியும், நான்கில் தோல்வியும் அடைந்துள்ளது.

53 வயதான இன்சமாம் இதற்கு முன்பு கடந்த 2016 முதல் 2019 வரையில் பாகிஸ்தான் அணியின் தலைமைத் தேர்வாளராக பணியாற்றி இருந்தார்.

இதனிடையேதான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இரண்டாவது முறையாக இன்சமாம் உல் ஹக் கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் நியமிக்கப்பட்ட அவரது தலைமையிலான குழுதான் ஆசிய கிண்ணம், ஒருநாள் உலகக் கிண்ணம் என இரு தொடர்களுக்கு வீரர்களை தேர்வு செய்தது.

இந்த இரு தொடரிலும் பாகிஸ்தான் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது.

தொடர் தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணி மீது விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில்தான் தொடர் தோல்விகளுக்கு மத்தியில் இன்சமாமின் இராஜினாமா அறிவிப்பு வந்துள்ளது.

அதேநேரம், இன்சமாமின் இராஜினாமாவுக்கு வேறொரு காரணம் சொல்லப்படுகிறது.