ஏழாவது தடவையாகவும் நோவக் ஜோகோவிச் பாரிஸ் மாஸ்டர்ஸ் கிண்ணத்தை வென்றுள்ளார்.
இது அவர் பெறும் 40 ஆவது மாஸ்டர்ஸ் பட்டமாகும்.
பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது.
இந்த போட்டியில் ஜோகோவிச், 6-4, 6-3 என்ற நேர் செட்டில் டிமிட்ரோவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இது 36 வயதான ஜோகோவிச் 2023 ஆம் ஆண்டில் பெறும் ஆறாவது பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.