7 ஆவது தடவையாகவும் பாரிஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்

1 month ago
Tennis
(99 views)
aivarree.com

ஏழாவது தடவையாகவும் நோவக் ஜோகோவிச் பாரிஸ் மாஸ்டர்ஸ் கிண்ணத்தை வென்றுள்ளார்.

இது அவர் பெறும் 40 ஆவது மாஸ்டர்ஸ் பட்டமாகும்.

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது.

இதில் ஒற்றையர் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை (06) நடந்த இறுதி போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பல்கேரியா வீரர் கிரிகோர் டிமிட்ரோவுடன் மோதினார்.

இந்த போட்டியில் ஜோகோவிச், 6-4, 6-3 என்ற நேர் செட்டில் டிமிட்ரோவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

இது 36 வயதான ஜோகோவிச் 2023 ஆம் ஆண்டில் பெறும் ஆறாவது பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.