75 வயதில் சாதனை படைத்த முல்லைத்தீவு அகிலத்திருநாயகி

5 months ago
Athletics
(231 views)
aivarree.com

பிலிப்பைன்சில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கை வீராங்கனை 2 தங்கப் பதக்கங்களையும், ஒரு வெண்கலப் பதக்கத்தினையும் வென்றுள்ளார்.

முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த 75 வயதான அகிலத்திருநாயகி என்பவரே இவ்வாறு பதக்கங்களை வெற்றி கொண்டவர் ஆவார்.

அவர், 1500 மீற்றர் ஓட்டம், 5000 மீற்றர் விரைவு நடை ஆகியவற்றில் தங்கம் வென்றார்.

அதேநேரம், 800 மீற்றர் போட்டியில் வெங்கலப் பதக்கம் வென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Image