2023 உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா அவுஸ்திரேலியாவுடன் தோல்வியடைந்ததை தொடர்ந்து, இந்திய வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
அகமதாபாத் மைதானத்தில் உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் பின்னர், இந்திய அணியினரின் ஓய்வறைக்கு சென்ற பிரதமர் மோடி,
” உலகக் கிண்ணத்தின் மூலம் உங்களின் திறமையும் உறுதியும் குறிப்பிடத்தக்கது.
நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.
நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் நிற்கிறோம்” என்றும் இந்திய வீரர்களுக்கு ஆறுதல் கூறி ஊக்கப்படுத்தினார்.
