மீண்டும் களமிறங்கும் நவோமி ஒசாகா

4 months ago
Tennis
(179 views)
aivarree.com

முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான நவோமி ஒசாகா மீண்டும் டென்னிஸ் அரங்கிற்கு திரும்பவுள்ளார்.

அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற உள்ளது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2 முறை சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா பங்கேற்க உள்ளார்.

குழந்தை பிறப்பை முன்னிட்டு இந்த ஆண்டில் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஒதுங்கி இருந்த ஒசாகா அவுஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

அதற்கு பயிற்சி மேற்கொள்ளும் விதமாக எதிர்வரும் டிசம்பர் 31 முதல் ஜனவரி 7ஆம் திகதி வரை நடைபெற உள்ள பிரிஸ்பேன் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் விளையாட உள்ளார்.

26 வயதான ஒசாகா நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.