8 ஆவது முறையாகவும் பலோன் டி’ஓர் விருதை வென்றார் மெஸ்ஸி

4 months ago
Football
(166 views)
aivarree.com

ஆர்ஜென்டீனா மற்றும் இண்டர் மியாமியின் முன்னணி வீரர் லியோனல் மெஸ்ஸி 2023 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் பலோன் டி’ஓர் விருதை வென்றுள்ளார்.

எட்டாவது முறையாகவும் அவர் குறித்த விருதினை பெறும் சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த ஆண்டு டிசம்பரில் கட்டாரில் நடந்த உலகக் கிண்ணத்தை ஆர்ஜென்டீனா வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார் 36 வயதான லியோனல் மெஸ்சி.

அந்த தொடரில் அவர் ஏழு கோல்களை அடித்துடன் நான்கு ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.

முன்னதாக இந்த விருதுக்கு அதிகமுறை பரிந்துரைக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்திருந்தார்.

மேலும் அதிகமுறை இந்த விருதை வென்றவரும் இவரே.

இந்த விருத்துக்கான போட்டி பட்டியலில் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலண்ட் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.