IPL | சென்னைக்கு மீண்டும் மழைக்காலம் | ஓவர் குறைந்தால் வெற்றியிலக்கு என்ன?

1 year ago
Cricket
(528 views)
aivarree.com

சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. 

போட்டியில் முதலில் துடுப்பாடிய குஜராத் 214 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 

215 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாட சென்னை ஆரம்பித்து, 3 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டது. 

இந்த போட்டியில் சென்னை வெற்றிபெற இன்னும் 117 பந்துகளில் 211 ஓட்டங்கள் பெற வேண்டும். 

மழை தற்போது விட்டிருப்பதாகவும், போட்டியை விரைவாக ஆரம்பிக்க முடியும் எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் சொல்கின்றன. 

இதேவேளை போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ஓவர் குறைக்கப்படுமாக இருந்தால் சென்னைக்கான வெற்றியிலக்கு டக்வர்த் லூவிஸ் முறைப்படி தீர்மானிக்கப்படும். 

அதன்படி சென்னை வெற்றிபெற 5 ஓவர்களில்  66 ஓட்டங்களை அல்லது 10 ஓவர்கள் என்றால் 123 ஓட்டங்களையும் அல்லது 15 ஓவர்கள் என்றால் 171 ஓட்டங்களையும் பெற்றிருக்க/ பெற வேண்டும்.