50 சதங்கள் ; சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோஹ்லி மைல்கல்

4 months ago
Cricket
(68 views)
aivarree.com

மும்பை, வான்கடேயில் நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண அரையிறுதி போட்டியில் விராட் கோஹ்லி ஒருநாள் அரங்கில் தனது 50 ஆவது சதத்தினை பதிவு செய்துள்ளார்.

மொத்தமாக 106 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக சதம் பெற்றார்.

இதன் மூலம் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடிக்கப்பட்டது.

சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 452 இன்னிங்ஸுகளை எதிர்கொண்டு 49 சதங்களை பெற்றிருந்தார்.

இந் நிலையில் அந்த சாதனையை விராட் கோஹ்லி இன்று வெறும் 279 இன்னிங்ஸ்களில் முறியடித்தார்.

அதேநேரம், ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் ஒரு தொடரில் அதிக ஓட்டம் குவித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையினையும் விராட் கோஹ்லி இந்த ஆட்டத்தில் முறியடித்தார்.

2003 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் சச்சின் டெண்டுல்கர் 673 ஓட்டங்கள‍ை பெற்றிருந்தார்.

இந்நிலையில், விராட் கோஹ்லி அந்த ஓட்ட இலக்கினையும் முந்தியுள்ளார்.