நியூஸிலாந்துக்கு இமாலய இலக்கினை நிர்ணயித்த இந்தியா

8 months ago
Cricket
(82 views)
aivarree.com

நியூஸிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டியில் இந்தியா 397 ஓட்டங்களை குவித்துள்ளது.

2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று ஆரம்பமானது.

மும்பை, வான்கடேயில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ஓட்டங்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் விராட் கோஹ்லி 117(113) ஓட்டங்களையும், ஸ்ரேயஸ் அய்யர் 105 (70) ஓட்டங்களையும், சுப்மன் கில் 80 (66) ஓட்டங்களையும் மற்றும் ரோஹித் சர்மா 47 (29) ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன் மூலம் நியூஸிலாந்துக்கு வெற்றி இலக்காக 398 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.