ஆசிய விளையாட்டு போட்டி: இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா

9 months ago
Cricket
(226 views)
aivarree.com

இலங்கை அணியை வீழ்த்திய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியானது, வரலாற்று சிறப்புமிக்க ஆசிய விளையாட்டு இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றது.

சீனாவின் ஹாங்சோ நகரில் ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 116 ஓட்டங்களை பெற்றது.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 97 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதனால், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியானது 19 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடரில் இந்தியாவுக்கு 2 ஆவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.