சுப்மன் கில்லை நெருங்கும் விராட் கோஹ்லி

5 months ago
Cricket
(102 views)
aivarree.com

ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய நட்சத்திரம் விராட் கோஹ்லி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.

இது, உலகின் நம்பர் 1 துடுப்பாட்ட வீரர் ஆவதற்கான அவரின் வேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில், விராட் கோஹ்லி 791 புள்ளிகளுடன் குறித்த தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

நடந்து முடிந்த உலகக் கிண்ணத்தில் அவர் மொத்தமாக 765 ஓட்டங்களை எடுத்தார்.

இது அவரை தரவரிசையில் மூன்றாம் இடத்துக்கு கொண்டு சேர்த்துள்ளது.

சக வீரரான சுப்மன் கில் 826 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 824 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ரோஹித் சர்மா 769 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

.