2023 நவம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரராக டிராவிஸ் ஹெட்

7 months ago
Cricket
(289 views)
aivarree.com

2023 நவம்பர் மாதத்துக்கான சிறந்த ஐசிசி ஆடவர் வீரருக்கான விருதினை அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியின் போது, சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியமைக்காகவே அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

சக வீரரான கிளென் மேக்ஸ்வெல் மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி ஆகியோருடான கடும் போட்டிக்கு மத்தியில் டிராவிஸ் ஹெட் 2023 நவம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.