ரோஹித், மேக்ஸ்வெல்லின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்

7 months ago
Cricket
(194 views)
aivarree.com

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி டி-20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 55 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.

இது சர்வதேச டி:20 கிரிக்கெட் அரங்கில் சூர்யகுமார் யாதவ் பெறும் 4 ஆவது சதம் ஆகும்.

இதன் மூலம் சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா மற்றும் கிளென் மேக்ஸ்வெல்லுடன் இணைந்து டி:20 அரங்கில் அதிகம் சதம் விளாசிய வீரர் ஆனார்.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முத்தரப்பு போட்டிகள் கொண்ட தொடரில் பங்கெடுத்து வருகின்றது.

இதில், முதலில் ஆரம்பமாகியுள்ள டி:20 தொடரின் முதல் போட்டியானது மழையால் கைவிடப்பட்டது.

பின்னர் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா டக்வெத் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றது.

இந் நிலையில் வியாழக்கிழமை (14) நடைபெற்ற மூன்றாவது டி:20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களை குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணியால் 13.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.

இதனால் இந்திய அணி 106 ஓட்டங்களினால் வெற்றி பெற்று, தொடரை 1:1 என்ற கணக்கில் சமப்படுத்தியது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி ஜோகன்னஸ்பர்க்கில் ஆரம்பமாகும்.

Image