2023 உலகக் கிண்ணத இறுதிப் போட்டியின் இரு நாட்களின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் கூட்டம் கூடவுள்ளது.
இக் கூட்டமானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) அகமதாபாத்தில் இடம்பெறும்.
மேலும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது குறித்தும் இங்கு விவாதிக்கப்படும் என்று espncricinfo தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணிக்கு கடந்த வாரம் விதிக்கப்பட்ட தடை விவகாரம் இக் கூட்டத்தில் பிரதான பேசு பொருளதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.