இந்திய தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

5 months ago
Cricket
(118 views)
aivarree.com

சொந்த மண்ணில் எதிர்வரும் டிசம்பர் 10 ஆரம்பமாகும் இந்தியாவுக்கு எதிரான மூன்று வடிவ கிரிக்கெட் தொடருக்கான தனது அணியினை தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.

இந்த சுற்றுப் பயணமானது மூன்று டி:20 போட்டிகளுடன் ஆரம்பமாகிறது.

அதையடுத்து 3 ஒருநாள் போட்டிகளும், இறுதியாக இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடைபெறும்.

டெஸ்ட் போட்டி 2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருக்கும்.

வழக்கமான அணித் தலைவர் டெம்பா பவுமா மற்றும் ககிசோ ரபாடா ஆகியோர் சுற்றுப் பயணத்தின் ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் டெஸ்ட் போட்டியில் பங்கெடுப்பார்கள்.

பவுமா இல்லாத நிலையில் டி:20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஐடன் மார்க்ரம் தலைவராக செயற்படுவார்.