ஐசிசி தரவரிசையில் ரவி பிஷ்னோய் முதலிடம்

7 months ago
(207 views)
aivarree.com

ஐசிசியின் அண்மைய டி:20 பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் முதலிடத்தை பிடித்துள்ளார்.

குறித்த தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே இந்திய பந்துவீச்சாளராக பிஷ்னோய் மாத்திரம் உள்ளார்.

கடந்த வாரம் ஐந்தாவது இடத்தில் இருந்தபோது பிஷ்னோய் 664 புள்ளிகளைக் கொண்டிருந்தார், ஆனால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நல்ல ஆட்டம் அவருக்கு மேலும் 34 புள்ளிகளைக் கொடுத்தது.

அதனால், அவர் 699 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்துக்கு வந்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி:20ஐ தொடரில் ஐந்து ஆட்டங்களில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி பிஷ்னோய் முன்னணி விக்கெட் வீழ்த்தியவர் ஆவார்.

கடந்த ஆண்டு பெப்ரவரியில் அவர் அறிமுகமானதில் இருந்து டி:20 தொடரில் இது அவரது சிறந்த ஆட்டங்களில் ஒன்றாகும்.

டி:20 அரங்கில் அவர் 21 ஆட்டங்களில் விளையாடி 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதேவ‍ேளை, இந்த தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதற்கு முன்னர் இரண்டாம் இடத்தில் இருந்த வனிந்து ஹசரங்க மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

அடில் ரஷித் நான்காவது இடத்தில் உள்ளார்.

முன்னதாக நான்காவது இடத்தில் இருந்த மகிஷ் தீக்ஷனா தற்போது ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.