Tamil Sports News

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியை அறிவித்தது பாகிஸ்தான்

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் அணியை அறிவித்தது பாகிஸ்தான்

File Photo

பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் இன்று (20) அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தங்கள் அணியை அறிவித்தது.

உலகக் கிண்ண தோல்வியின் எதிரொலியாக பாபர் அசாம் தலைவர் பதவியிலிருந்த விலகியுள்ளார்.

அதனால், தலைமைப் பொறுப்பானது முதன் முறையாக ஷான் மசூத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையிலும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14 ஆரம்பமாகும்.
Exit mobile version