CWC23 நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி – தீக்ஷன உள்ளே!

9 months ago
Cricket
(192 views)
aivarree.com

2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி சற்று நேரத்தில் ஆரம்பாகவுள்ளது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

11 பேர் கொண்ட இலங்கை அணியில், காயம் காரணமாக கடந்த போட்டியை தவற விட்ட மகேஷ் தீக்ஷன இடம்பெற்றுள்ளார்.

தீக்ஷனவின் வரவானது இலங்கை அணிக்கும், இலங்கையின் ரசிகர்களுக்கும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை – பாகிஸ்தான் இடையிலான இந்த போட்டியானது பிற்பகல் 2.00 மணிக்கு ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராஜிவ் காந்தி மைத்தானத்தில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.