பாபர் அசாம் அனைத்து வகையான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
2023 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் லீக் சுற்றில் வெளியேறியத்தை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அவர் டி:20 கிரிக்கெட் அணிக்கு பெறுப்பேற்ற ஒரு வருடத்தின் பின்னர் அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் தலைவராக பதவி ஏற்றார்.
இந் நிலையில் உலகக் கிண்ணத் தோல்வி 29 வீரரான பாபர் அசாமின் பதவி விலகலுக்கு வழி வகுத்துள்ளது.