பத்திரனவின் இடத்துக்கு மெத்தியூஸ்

4 months ago
Cricket
(187 views)
aivarree.com

காயமடைந்த மத்திஷ பத்திரனவுக்கு பதிலாக சிரேஷ்ட வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் நடப்பு உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் இதனை உறுதிபடுத்தியுள்ளன.

மத்திஷ பத்திரனவுக்கு ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை.
இதனால் அவர் 2023 உலகக் கிண்ணத்தில் ஏனைய போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை இழந்துள்ளார்.

இந்நிலையில், மேலதிக வீரராக இந்தியா சென்றுள்ள அஞ்சலோ மெத்தியூஸ் அவருக்கு பதிலாக அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை அணி தனது அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும்.

இந்த ஆட்டம் ஒக்டோபர் 26 ஆம் திகதி பெங்களூரில் ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.