2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ண மோதலானது ஏழு வாரங்களுக்கு பின்னர் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (21) அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆறாவது முறையாகவும் ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்த சேஸிங்கில் டிராவிஸ் ஹெட்டின் 137 ஓட்டம் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு பெரும் பக்க பலமாக அமைந்தது.
இந் நிலையில் நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நிறைவடைந்ததைத் தொடர்ந்து பல விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
மும்பை, வான்கேடயில் நடந்த அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிராக 106 பந்துகளில் சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் சதம் என்ற சாதனையினை முறியடித்தார் கோஹ்லி.
அத்துடன், இந்த உலகக் கிண்ணத்தில் மொத்தமாக 765 ஓட்டங்களையும் பெற்றார்.
இதன் மூலம் ஒரு உலகக் கிண்ணத்தில் தொடரில் அதிகபடியான ஓட்டங்களை குவித்த வீரர் என்ற பெருமையினையும் அவர் பெற்றார்.
- போட்டியின் சிறந்த வீரர்: விராட் கோஹ்லி – (765 ஓட்டங்கள், ஒரு விக்கெட்)
- இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன்: டிராவிஸ் ஹெட் (137 ஓட்டம்)
- அதிக ஓட்டம்: விராட் கோஹ்லி (11 போட்டிகளில் 765 ஓட்டங்கள்)
- அதிக சதம்: குயின்டன் டிகொக் (நான்கு சதங்கள்)
- அதிகபட்ச தனி நபர் ஓட்டம் : கிளென் மேக்ஸ்வெல் (201* ஆப்கானிஸ்தானுக்கு எதிராக)
- அதிக அரைசதம்: விராட் கோஹ்லி (6 அரைசதம்)
- அதிக விக்கெட்டுகள்: மொஹம்ட ஷமி (24 விக்கெட்)
- சிறந்த பந்துவீச்சாளர்: மொஹமட் ஷமி (7/57 – நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி)
- அதிக சிக்ஸர்கள்: ரோஹித் சர்மா (31 சிக்ஸர்கள்)
- அதிக பிடியெடுப்புகள் : டேரில் மிட்செல் (11 பிடியெடுப்பு)
- அதிக ஆட்டமிழப்புகளை செய்த விக்கெட் காப்பாளர் குயின்டன் டிகொக் : (20 முறை)