ஞாயிற்றுக்கிழமை அல் துமாமா மைதானத்தில் நடந்த ஃபிஃபா உலகக் கிண்ண போட்டியில் பெல்ஜியம் மொரோக்கோவிடம் 2-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
தொடரில் இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி பெற்று 3 புள்ளிகளுடன் பெல்ஜியம் புள்ளி அட்டவணையில் இரண்டாவது இடத்திலுள்ளது.
ஒரு புள்ளியுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் குரோஷியா, இன்று ஞாயிற்றுக்கிழமை கனடாவை எதிர்கொள்கிறது.
குரோஷியா வென்றால் நான்கு புள்ளிகளுடன் புள்ளி அட்டவணையில், மொரோக்கோவுடன் சமமான நிலைக்கு செல்லும்.
கனடா இந்த உலகக் கிண்ணத் தொடரின் முதல் புள்ளியைப் பெறும்.
பெல்ஜியம் தனது இறுதி குழு எஃப் போட்டியில் குரோஷியாவை எதிர்கொள்ளவுள்ளது.
இதில் பெல்ஜியம் வெற்றி பெற்றால், 6 புள்ளிகளை எட்டி, 16 அணிகளின் சுற்றுக்கு தகுதி பெறும்.
குரோஷியாவுக்கு எதிராக பெல்ஜியம் போட்டியை சமன் செய்தால், நொம் அவுட் சுற்றுக்கு தகுதி பெற, ஏனைய போட்டி முடிவுகளை நம்பியிருக்க வேண்டும்.