FIFA தொடரை நடத்தும் கட்டார் வெளியேற்றம் 

2 years ago
Local Sports
(1341 views)
aivarree.com

நெதர்லாந்து ஈக்வடோர் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 எனச் சமநிலையில் முடிந்தது. 

இதனால் உலகக்கிண்ண போட்டித் தொடரை நடத்தும் நாடான கட்டார் தொடரிலிருந்து வெளியேறியது.  

இன்றைய போட்டி சமநிலையில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் கிடைத்தன. 

இதனால் குழு A இல் 4 புள்ளிகளைப் பெற்ற நிலையில் நெதர்லாந்து மற்றும் ஈக்வடோர் அணிகள் உள்ளன. 

ஏற்கனவே செனகலிடம் 3-1 என்ற கோல் கணக்கில் தோற்ற கட்டார், புள்ளிகள் எதுவும் பெறாத நிலையில் தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தண்ட உதை மூலம் ஆறாவது நிமிடத்தில் நெதர்லாந்தின் கோடி காக்போ கோல் போட்டார். 

இந்த தொடரில் இதுவரை அடிக்கப்பட்ட வேகமான கோலாக இது அமைந்தது.

அதேநேரம் ஈக்வடோர் அணித் தலைவர் என்னெர் வெலன்ஸ்கி காயமடைந்து வெளியேறினார்.