சர்வதேச காற்பந்து சம்மேளனமான FIFAவின் வாக்கெடுப்புகளில் இருந்து இலங்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ரூவாண்டாவின் கிகலி நகரில் நடைபெற்ற சர்வதேச காற்பந்து சம்மேளனத்தின் 73ஆவது காங்கிரஸ் கூட்டத்தில் இதற்கான பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 197 உறுப்பு நாடுகள் வாக்களித்தன.
இலங்கை காற்பந்து சம்மேளனம் சர்வதேச காற்பந்து சம்மேளனத்தின் விதிகளுக்கு புறம்பாக செயல்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதன் அடிப்படையில் சர்வதேச காற்பந்து சம்மேளனம் இலங்கை காற்பந்து சம்மேளனத்தை தடை செய்துள்ளது.
இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலைவராக அண்மையில் ஜெய் ஶ்ரீரங்கா தெரிவு செய்யப்பட்டார்.
இந்தத்தெரிவும் சட்ட விரோதமானது என ஃபிஃபா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.