SLC க்கு அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால குழு நியமனம்

6 months ago
Cricket
(89 views)
aivarree.com

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் தற்போது நிலவும் சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

1996 ஆம் உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் மோசமான செயற்பாட்டினால், ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) குழுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப் பெற்று வருகின்றன.

இந் நிலையிலேயே 7 பேர் கொண்ட இக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தினால் வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் அமைச்சர் இடைக்காலக் குழுவை நியமித்துள்ளதாக வியைாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.