அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கிண்ண இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.
2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொல்கத்தா எடன் கார்டன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஆரம்பமானது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.
அணி சார்பில் டேவிட் மில்லர் அதிகபடியாக 101 ஓட்டங்களையும், ஹென்ரிச் கிளாசென் 47 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 213 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.