CWC23; தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

5 months ago
Cricket
(109 views)
aivarree.com

2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இன்று நடைபெறும் 42 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் – தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த ஆட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமாகும்.

தென்னாப்பிரிக்கா ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.

ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை படுதோல்வி அடைய செய்ய வேண்டும்.

இந்த தோல்வியானது ஆப்கானிஸ்தானின் ரன் ரேட்டிலும் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்தால் ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இருக்கும்.

ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தால் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு முடிந்துவிடும்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இரு அணிகளும் ஒரே ஒரு தடவை மாத்திரம் மோதியுள்ளன.

அந்த ஒரு போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.