கிறிஸ் கெய்லை முந்தினார் ரோஹித் சர்மா

4 weeks ago
Cricket
(49 views)
aivarree.com

மும்பை, வான்கடே மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள நியூஸிலாந்து அணியுடனான முதலாவது அரையிறுதி போட்டியில் ரோஹித் சர்மா, கிறிஸ் கெய்லின் பல சாதனையினை முறியடித்துள்ளார்.

36 வயதான இந்திய அணித் தலைவர் சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் அதிக சிக்ஸர்களை பதிவு செய்த கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்தார்.

கிறிஸ் கெய்ல் முன்னதாக 27 உலகக் கிண்ண போட்டிகளில் 49 சிக்ஸர்களை அடித்திருந்தார்.

இந்நிலையில், ரோஹித் சர்மா ஒட்டுமொத்த ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் 50 சிக்ஸர்களுடன் அந்த சாதனையினை முறியடித்தார்.