பஙளோதேஷ் அணிக்கு எதிரான நேற்றையை போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 45.1 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றது.
பங்களாதேஷ் சார்பில் அதிகபடியாக மஹ்முதுல்லாஹ் 56 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 45 ஓட்டங்களையும், அணித் தலைவர் சஹிப் அல்ஹசன் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் சார்பில் ஷெஹின் அப்ரிடி, மொஹமட் வசிம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹரிஸ் ரவுப் 2 விக்கெட்டினையும் அதிகபடியாக கைப்பற்றினர்.
பாகிஸ்தான் சார்பில் அதிகபடியாக ஆரம்ப வீரர்களான அப்துல்லா ஷபீக் 68 ஓட்டங்களையும், ஃபகார் ஜமான் 81 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் ஆறு புள்ளிகளுடன் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியது.
எஞ்சியுள்ள நியூசிலாந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் நுழைய அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
இதனால் அரையிறுதி வாய்ப்பில் பாகிஸ்தான் அணி நீடித்துள்ளது.
2023 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண நொக் அவுட் கட்டத்தில் அரையிறுதிக்கான இடத்தினை தக்க வைத்துக் கொள்வதற்காக ஒவ்வாரு அணியும் முட்டி மோதி வருகின்றன.
எந்த அணியும் இதுவரை அரையிறுதியில் தங்கள் இடத்தை இன்னும் உறுதிபடுத்தவில்லை.
தென்னாப்பிரிக்காக, நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவை இந்தியாவுடன் இணைந்து முதல் நான்கு இடத்தில் உள்ளன.
இன்னும் 14 குழு நிலை ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
அடுத்தடுத்த போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகளும் எது என்பது தெளிவாகும்.