204 ஓட்டங்களுக்குள் சுருண்டது பங்களாதேஷ்

1 month ago
Cricket
(94 views)
aivarree.com

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய உலகக் கிண்ண போட்டியில் பங்களாதேஷ் 204 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் 31 ஆவது போட்டி பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொல்கத்தா, எடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 45.1 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பங்களாதேஷ் சார்பில் அதிகபடியாக மஹ்முதுல்லாஹ் 56 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 45 ஓட்டங்களையும், அணித் தலைவர் சஹிப் அல்ஹசன் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் சார்பில் ஷெஹின் அப்ரிடி, மொஹமட் வசிம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹரிஸ் ரவுப் 2 விக்கெட்டினையும் அதிகபடியாக கைப்பற்றினர்.

இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இமலக்காக 205 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.