CWC23; தென்னாப்பிரிக்கா – நியூஸிலாந்து இன்று மோதல்

4 months ago
Cricket
(120 views)
aivarree.com

2023 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத்தில் இன்று நடைபெறும் 32 ஆவது ஆட்டத்தில் சம பலம் கொண்ட தென்னாப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டம் இன்று பிற்பகல் புனேயில் ஆரம்பமாகவுள்ளது.

நியூசிலாந்து அணி தனது முதல் 4 ஆட்டங்களில் இங்கிலாந்து, நெதர்லாந்து, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து வென்றது.

அதன் பின்னர் இந்தியா, அவுஸ்திரேலியாவுடன் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி, புள்ளிப் பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது.

அதேநேரம், தென்னாப்பிரிக்கா 6 போட்டிகளில் விளையாடி 5 இல் வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 2 ஆவது இடத்தில் உள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் 71 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

அதில் தென்னாப்பிரிக்கா 41 தடவையும், நியூஸிலாந்து 25 தடவையும் வெற்றி பெற்றுள்ளன.

5 போட்டிகள் முடிவின்றி கைவிடப்பட்டது.

ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் 8 முறை இரு அணிகளும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.

அதில் நியூஸிலாந்து 6 தடவையும் தென்னாப்பிரிக்கா 2 தடவையும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.