மொஹமட் ஷமி சாதனை

4 months ago
Cricket
(120 views)
aivarree.com

ஒரே உலகக் கிண்ண தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய இந்திய அணியின் பந்து வீச்சாளர் என்ற சாதனையை மொஹமட் ஷமி படைத்துள்ளார்.

மும்பை, வான்கடேயில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் மொஹமட் ஷமி 9.5 ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 57 ஓட்டங்களை வழங்கி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை படைத்தார்.

நடப்பு உலகக் கிண்ண தொடரில் 3 இன்னிங்ஸில் 5+ விக்கெட்களை ஷமி கைப்பற்றி உள்ளார்.

உலகக் கிண்ணத்தில் அதிக முறை 5+ விக்கெட்களை கைப்பற்றிய வீரராகவும் அவர் (ஒட்டுமொத்தமாக 4 முறை) திகழ்கிறார்.

நடப்பு உலகக் கிண்ணத்தில் 23 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் ஒரே உலகக் கிண்ணத் தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரராக உள்ளார்.

இந்த பட்டியலில் மிட்சேல் ஸ்டார்க் 27 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இறுதிப்போட்டியில் ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினால் இந்த சாதனையையும் முறியடித்துவிடுவார்.

அதேநேரம், ஒருநாள் போட்டியில் ஒரே ஆட்டத்தில் 7 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஷமி படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியது கிடையாது.

நேற்றைய போட்டியின் ஆட்டநாயகன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.