நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ண போட்டியில் இந்தியா 160 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு உலகக் கிண்ணத்தில் இந்தியா தான் எதிர்கொண்ட ஒன்பது லீக் போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையினை பெற்றுள்ளது.
இந்த இன்னிங்ஸில் ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் சதங்களை பதிவு செய்தனர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக 128 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்ற ஸ்ரேயஸ் அய்யர் தெரிவானார்.