மீண்டும் இமாலய இலக்கினை குவித்த தென்னாப்பிரிக்கா

4 months ago
Cricket
(105 views)
aivarree.com

பங்களாதேஷுடனான உலகக் கிண்ண போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 382 ஓட்டங்களை குவித்துள்ளது.

மும்பை, வான்கடே மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 382 ஓட்டங்களை குவித்தது.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டிகொக் 174 (140) ஓட்டங்களையும், ஹென்ரிச் கிளாசென் 90 (49) ஓட்டங்களையும் மற்றும் ஐடன் மார்க்ராம் 60 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்று ஆட்டமிழந்தனர்.

இறுதி வரை அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 15 பந்துகளில் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களை பெற்றார்.

இதன் மூலம் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி 383 இலக்காக ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.