குசல் மெண்டீஸ் அதிரடி சதம்

8 months ago
Cricket
(274 views)
aivarree.com

பாகிஸ்தானுடனான 2023 உலகக் கிண்ண போட்டியில் இலங்கையின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டீஸ் சதம் விளாசியுள்ளார்.

போட்டியில் இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய குசல் மெண்டீஸ் மொத்தமாக 65 பந்துகளை எதிர் கொண்டு சதம் விளாசினார்.

4 சிக்ஸர்களும், 13 பவுண்டரிகளும் அதில் அடங்கும்.

ஹைதராபாத்தில் இடம்பெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை 27 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்களை குவித்துள்ளது.

குசல் மெண்டீஸ் 106 ஓட்டங்களுடனும், சமரவிக்ரம 34 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.