சீனாவில் நடைபெற்று வரும் 4 ஆவது ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு மேலும் இரு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஆடவர் நீளம் பாய்தல் (T64) போட்டியில் இலங்கை வீரர் நுவான் இந்திகா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அவர் இலக்கினை 12.98 வினாடிகளில் ஓடி முடித்து பதக்கம் வென்றுள்ளார்.
குறித்த போட்டியில் இலங்கை இரண்டு தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்மாக 10 பதக்கங்களை வென்றுள்ளது.