2024 IPL வீரர்கள் ஏலப் பட்டியல் வெளியீடு

3 months ago
Cricket
(133 views)
aivarree.com

2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனுக்கான வீரர்கள் ஏலத்திற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 333 கிரிக்கெட் நட்சத்திரங்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

குறித்த ஏலமானது எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதி டுபாயில் கோகோ கோலா அரங்கில் நடைபெறும்.

333 நட்சத்திரங்களில் 214 பேர் இந்திய வீரர்கள் ஆவர்.

119 பேர் வெளிநாட்டு வீரர்கள்.

இவர்களில் 116 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள்.

ஏலத்தில் 30 வெளிநாட்டவர் உட்பட மொத்தம் 77 வீரர்கள் 10 அணிகளுக்காக எடுக்கப்பட உள்ளனர்.

வீரர்களை வாங்க அதிகபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணி 38 கோடியே 15 இலட்சம் இந்திய ரூபாவை கையிருப்பாக வைத்துள்ளது.

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சிடம் 31.4 கோடி இந்திய ரூபா இருப்புத்தொகை உள்ளது.

2024 IPL வீரர்கள் ஏலத்தின் முழுமையான பட்டியலை பார்க்க இங்கே பார்க்கலாம்.