சீனாவின், ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கை வீரர் சமித துலான் கொடித்துவக்கு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (F64) போட்டியிலேயே அவர் வெள்ளி பதக்கம் வென்றார்.
இந்த போட்டியில் இந்தியாவின் சுமித் ஆன்டில் 73.29 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையாக தங்கப் பதக்கம் வென்றார்.
இந்தியாவின் மற்றொரு வீரரான புஷ்பேந்திர சிங் 62.06 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலமும் வென்றனர்.