சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் 2023 ஆசிய விளையாட்டு போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இப் போட்டியில் இந்தியாவின் ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சீனாவின் சுன்யு வாங் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
2002 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிய விளையாட்டு தடகளப் போட்டிகளில் இலங்கை பெற்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை இதுவரை ஒரு தங்கப் பதக்கத்தையும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.