நிறைவுக்கு வந்த ஆசிய விளையாட்டு போட்டி ; இலங்கை 26 ஆம் இடம்

9 months ago
Athletics
(477 views)
aivarree.com

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை 26 ஆவது இடத்தை பிடித்தது.

இந்த போட்டியில் இலங்கை ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது.

19 ஆவது ஆசிய விளையாட்டு பேட்டிகளானது கடந்த செப்டெம்பர் 23 ஆம் திகதி சீனாவின் ஹாங்சோவில் ஆரம்பமானது.

இதில் ஆசிய ஒலிம்பிக் கூட்டமைப்பின் 45 நாடுகளைச் சேர்ந்த 12,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் போட்டியிட்டனர்.

மொத்தம் 481 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இப் போட்டியில் சீனா 201 தங்கம், 111 வெள்ளி, 71 வெண்கலம் என மொத்தம் 383 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது.

ஜப்பான் 52 தங்கம், 67 வெள்ளி, 69 வெண்கலம் என மொத்தம் 188 பதக்கங்களுடன் 2 ஆவது இடத்தைப் பெற்றது.

கொரியா 42 தங்கம், 59 வெள்ளி, 89 வெண்கலம் என மொத்தம் 190 பதக்கங்களுடன் 3 ஆவது இடத்தைப் பிடித்தது.

இந்தியா 28 தங்கம் உட்பட 107 பதக்கங்களுடன் 4-வது இடத்தைப் பிடித்தமையும் குறிப்பிடத்தக்கது.