ACC U19 கிண்ணத்துக்கான பயணத்தை ஆரம்பித்த இலங்கை அணி

7 months ago
Cricket
(173 views)
aivarree.com

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண (ACC U19) போட்டிக்காக இலங்கை அணி ஐக்கிய அரபு இராஜ்ஜியம் நோக்கி புறப்பட்டது.

வீரர்கள் மற்றும் அதிகாரிகளை கொண்ட இலங்கை அணியினர் இன்று (06) அதிகாலை கட்டுநாயக்க, விமான நிலையத்திலிருந்து டுபாய் நோக்கி புறப்பட்டனர்.

15 பேர் கொண்ட இந்த அணியின் தலைவராக கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் சினெத் ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான ஐசிசியின் தடைக்கு பின்னர் இலங்கை கிரக்கெட் அணி பங்கெடுக்கும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

ACC U19 போட்டிகளானது எதிர்வரும் 08 ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 17 ஆம் திகதி முடிவடையும்.