கம்பீரின் பார்வை மதுஷங்க பக்கம் – ஆகாஷ் சோப்ரா

7 months ago
Cricket
(368 views)
aivarree.com

2024 இந்தியன் பிரீமியர் லீக் மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்காவை குறிவைக்கலாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

2014 ஐ.பி.எல். சாம்பியன்கள் தங்கள் இருப்பில் ₹32.70 கோடியுடன் வரவிருக்கும் ஏலத்துக்கு தயார் நிலையில் உள்ளனர்.

அவர்கள் லொக்கி பெர்குசன், ஷர்துல் தாக்கூர், டிம் சவுத்தி மற்றும் உமேஷ் யாதவ் போன்ற குறிப்பிடத்தக்க வேகப்பந்து வீச்சாளர்களை விடுவித்துள்ளனர்.

கொல்கத்தா அணியிடம் தற்சமயம் ஹர்ஷித் ராணா மற்றும் வைபவ் அரோரா என இரண்டு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

மேலும், ஆண்ட்ரே ரஸ்ஸலின் பந்துவீச்சுத் திறன் எப்படியிருந்தாலும் பெரிய சந்தேகமாகவே உள்ளது.

இந் நிலையில் கொல்கத்தா அணியின் ஆலோசகரான கௌதம் கம்பீரின் பார்வை இந்த சீசனில் தில்ஷான் மதுஷங்கா மீது உள்ளது.

எனவே மதுஷங்கவுக்கு உண்மையில் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கலாம்.

அவர் ஆறு முதல் எட்டு கோடிக்கு விற்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.